நுவரெலியாவில் வெப்பநிலை 14 பாகை செல்சியஸாக குறைவடைந்தது
Ad Space
Ad Space
நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று செவ்வாய்க்கிழமை (06) நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
அதன்படி, 14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் அதிகாலை நேரத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்கள் தெரிவித்த தரவுகளின் அடிப்படையில் இது பதிவாகியுள்ளது.
மேலதிகமாக,நேற்று திங்கட்கிழமை (05) அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காலை 8:30 மணி முதல் இன்றைய தினம் காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கண்காணிப்பு நிலையங்களில் பதிவான மழைப்பொழிவின் அடிப்படையில் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space