நெடுங்கமுவ விஜய ராஜா யானையின் பாதுகாக்கப்பட்ட உடற் பாகங்கள் பொதுமக்கள் பார்வைக்கு
Ad Space
Ad Space
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் பாதுகாக்கப்படும் பத்திரின் புனித பல் வைக்கப்பட்டுள்ள ஏழு அடுக்கு பேழையை 16 ஆண்டுகளுக்கும் மேலாக சுமந்து சென்ற நெடுங்கமுவ விஜய ராஜா யானையின் பாதுகாக்கப்பட்ட உடற் பாகங்கள், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் புதன்கிழமை (11) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
ஆசியாவிலேயே மிக உயரமான தந்தங்களைக் கொண்ட யானையாகக் கருதப்பட்ட நெடுங்கமுவ விஜய ராஜா, 2022 ம் ஆண்டும மார்ச் மாதம் 07ம் திகதி உயிரிழந்தது.
அதன் மறைவைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் வைத்தியர் ஹர்ஷ தர்மவிஜய விடுத்த வேண்டுகோளுக்கமைய, இந்த யானையின் உடற் பாகங்கள் ஒரு தேசிய பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் இலங்கையின் தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்றுக்கொண்டன.
யானை உயிரிழந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் பாதுகாக்கப்பட்ட உடல் பாகங்கள் இப்போது உத்தியோகபூர்வமாக கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
Ad Space
Ad Space