பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு
Ad Space
Ad Space
சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (17) புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், 3 ஆம் சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space