பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்களை நாட்டுக்குக் அழைத்து வருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பாதாள உலகக் குழுவினரைத் இராஜதந்திர தூதரக உறவுகள் மூலம் இலங்கைக்குக் அழைத்துவர முடியுமென்றால், இவர்களைக் கொண்டுவருவதும் சாத்தியமானதே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் வியாழக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த நபர்களை நாட்டுக்குக் அழைத்துவரும் விவகாரம் முற்றிலும் நீதித்துறை சார்ந்த ஒரு செயல்முறையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்பு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் தேவையான அனைத்து வசதிகளையும், சுயாதீனத்தையும் தடையின்றிச் செய்துகொடுப்பதே ஆகும்.
அதனடிப்படையில், எமது விசாரணை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை முறையாக முன்னெடுத்து, நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வார்கள். அதன் பின்னரே அவர்கள் மீதான பிணை அல்லது சிறைத்தண்டனை போன்ற இறுதித் தீர்மானங்களை நீதிமன்றம் சுயாதீனமாக மேற்கொள்ளும்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வக் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளனவா என்பது குறித்த துல்லியமான விபரங்கள் தற்போதைக்குத் என்னிடம் இல்லை. எவ்வாறாயினும், இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேசப் பொலிஸாரின் முழுமையான ஆதரவு அரசாங்கத்திற்குத் தூதரக ரீதியாகத் தொடர்ந்து கிடைத்து வருகின்றது.
இதன்படி, பொதுமக்கள் தற்போதைக்கு நினைத்துக் கூடப் பார்க்காத பல முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள். இந்தச் சட்ட நடவடிக்கைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் நடக்கும் என்றார்.
பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நிதி மோசடியாளர்களை நாட்டுக்குக்கு அழைத்து வருவதில் தடையில்லை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space