மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை நிதி தூய்தாக்கல் மூலம் கொள்முதல் செய்தார் என்ற வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விரிவான விசாரணை அறிக்கையை அடுத்தே இந்த திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வமான வருமான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறியதை அடுத்து, குறித்த பிரவுன்ஸ் ஹில் காணியின் பயன்பாட்டை முடக்கி மாத்தறை மேல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.