பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும் கையெழுத்துப் பெறும் போராட்டம் வியாழக்கிழமை (26.02.2026) யாழ் தென்மராட்சிப்  பிரதேசத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம்  பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.
இந்தக் கையெழுத்துப்பெறும் போராட்டத்தில் சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர், சாவகச்சேரிப் பிரதேச சபை உறுப்பினர்களான செ.மயூரன், கு.தினேஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர்.