பருத்தித்துறையில் கைக்குண்டு மீட்பு
Ad Space
Ad Space
பருத்தித்துறை, கொட்டடி மீன் சந்தைப் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் அகழப்பட்ட மணல், கொட்டடி மீன் சந்தைப் பகுதியில் வீதியோரமாக அண்மையில் கொட்டப்பட்டிருந்தது.
அதற்குள் இருந்தே இந்த கைக்குண்டு நேற்று அவதானிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு கடற்தொழிலாளர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட மேலதிக நடவடிக்கையின் அடிப்படையில், அந்த கைக்குண்டு விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு, மணற்காட்டுப் பகுதியில் வைத்து பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space