முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் இன்று (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவேந்தல் பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர் வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கமும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space