திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் கட்டடமொன்றை நிர்மாணித்தல் மற்றும் புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் பலாங்கொட கஸ்ஸப தேரர் நாளை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விகாரை வளாகத்தில் விகாரை மண்டபமொன்றை நிர்மாணித்தல் மற்றும் புத்தர் சிலையொன்றை நிறுவுதல் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவரை நாளை செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.