பலாப்பழம் பறிக்க முயன்ற குடும்பஸ்தர் மரத்திலிருந்து விழுந்து பலி!
Ad Space
Ad Space
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபிட்டிய பகுதியில், மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மரத்திலிருந்து விழுந்து காயமடைந்த குறித்த நபர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிங்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் பலாப்பழம் பறிப்பதற்காக வீட்டின் முன்னால் இருந்த பலா மரத்தில் ஏறிய போது, அதிலிருந்து தவறி விழுந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கம்பளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space