பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வைத்திருந்த மாணவர் நீக்கம்!
Ad Space
Ad Space
பல்கலைக்கழகம் ஒன்றின் விடுதியில் போதைப் பொருட்களை வைத்திருந்த மாணவர் ஒருவர் அப்பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விடுதியின் குறிப்பிட்ட அறையை சோதனை செய்த போது 'ஐஸ்' உள்ளிட்ட இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டதன் பின்னர், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் குறித்த மாணவன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space