பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல் : யாழிலிருந்து ஒலித்த குரல்
Ad Space
Ad Space
அவசியமான சட்ட திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(07) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இனப் பிரச்சினைக்கு தீர்வான ஒரு படிமுறையான வடிவமாகவே இந்த மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. அந்தந்த மாகாணங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற முதலமைச்சர் அவருக்கு கீழ்வருகின்ற அமைச்சரவை, மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபை தேர்தலானது நடத்தப்படவில்லை. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் இந்த மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவை அரசியலமைப்புக்கு மாறானவை என்பதுடன் மக்களுடைய ஜனநாயக உரிமையை மீறுகின்ற செயலாகும்.
Ad Space
Ad Space