பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் கிரிக்கெட் சபைக்கும் நன்றி தெரிவித்தார் அமைச்சர் விஜித ஹேரத்
Ad Space
Ad Space
இலங்கையின் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்ததற்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவாகர அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் ரி20 உலகக் கிண்ண போட்டியின் கீழ், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் தீர்மானம் குறித்து விஜித ஹேரத் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது விளையாட்டுத்திறன், நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் வலிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
Ad Space
Ad Space