யங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (05.06.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பௌத்த துறவிகளின் துறவறத்திற்கு எதிரான செயற்பாடுகளாலும் , விகாரைகள் மற்றும் மடாலயங்களின் கட்டமைப்பு அதன் நிர்வாகம் தொடர்பான விடயத்திலும் பௌத்த சிங்களவர்கள் கோபமடைந்து வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை தோன்றிள்ளது.
புலி உருவாக்கம் மீண்டும் பேச்சுப் பொருளாகி உள்ள சூழ்நிலையில் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தியினர் வடக்கிலே தமது தேர்தல் வேட்டையின் போது விடுதலைப்புலிகளின் இயக்க பாடல்களை தமது தேர்தல் மேடைகளில் முழங்கி அரசியல் செய்த போதும் தமிழர்கள் அவர்களை குற்றவாளி கூண்டிலே நிறுத்தவில்லை.
ஆனால் சங்கீதன் எழுச்சி பாடல்கள் பாடியதை புலி உருவாக்கம் எனக் கூறி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space