பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் : சீருடைத் துணி விநியோகமும் நிறைவு
Ad Space
Ad Space
அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்டமும் இன்று ஆரம்பமாகியுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைக்காக முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10) நிறைவடைந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை (20) இரண்டாம் தவணை ஆரம்பமாகிறது. இந்த இரண்டாம் பாடசாலைத் தவணையானது 2026 ஜூலை 24ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்காக சீன மக்கள் குடியரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட முழுமையான பாடசாலை சீருடைத் துணிகளின் விநியோகம் தற்போது நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலை மாணவர்கள், பிக்கு மாணவர்கள் மற்றும் பிரிவேனா மாணவர்களுக்காக மொத்தம் 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணி சீனாவினால் இலவசமாக வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 4,418,404 மாணவர்களுக்கான சீருடைத் துணி விநியோகிக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Ad Space
Ad Space