அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மற்றும் பாடசாலை இரண்டாம் தவணை நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
கல்வி அமைச்சின் அட்டவணையின்படி, பாடசாலை இரண்டாம் தவணையானது ஜூலை மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space