பாம்பு தீண்டி வருமான வரி பரிசோதகர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
பாம்பு தீண்டி, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமான வரி பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.
மல்லாவியில் நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்த பரிசோதகர் வயலொன்றைப் பார்வையிடச் சென்றபோதே பாம்பு தீண்டி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துணுக்காய் பகுதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான, திருநாவுக்கரசு கிருபாகரன் (வயது 55) என்ற வருமான வரி பரிசோதகரே உயிரிழந்தவராவார்
சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space