கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருணாகல் பகுதியில் இருந்து அட்டன் நோக்கிப் பயணித்த பாரிய லொறி ஒன்று, அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

புன்னாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற குறித்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கினிகத்தேன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.