புனித பூமியை (ருவன்வெலிசாய) அழிக்கும் அரசாங்கத்தின் போலி அபிவிருத்தித் திட்டத்தைத் தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் பிக்குகள் குழுவினர் அநுராதபுரத்தில் மீண்டும் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தின்போது அங்கு விரைந்த பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் மற்றும் ஏனைய போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அநுராதபுர புனித பூமியின் பாதுகாப்பு மற்றும் ருவன்வெலிசாயவைச் சுற்றியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் சிறிலங்கா காவல் துறைக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட து.


