பிபில - பதுளை வீதியில் விபத்து ; 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Ad Space
Ad Space
பிபில - பதுளை வீதியில் யல்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கவனக்குறைவாக செலுத்தப்பட்ட பஸ் ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதி பின்னர் மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Ad Space
Ad Space