பிரான்சில், அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய பேரணிகள் உச்சகட்ட தெரு வன்முறையாக மாறியதால், பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள், பெரும் கொள்ளை மற்றும் பல இடங்களில் தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பல வாரங்களாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த பரவலான அமைதியின்மையானது, இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் வேளையில், அரசியல் நிச்சயமற்ற தன்மையை மேலும் ஆழப்படுத்துகிறது.

உலகப் போர்களில் இருந்து தப்பிய பிரான்சின் Limoges நகர சபை கலவரக்காரர்களால் தீக்கிரை | Limoges Town Hall Destroyed

 

முகமூடி அணிந்த இளைஞர் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்குத் தீ வைத்து, பல கடைகளைச் சூறையாடியதால், பாரிஸில் உள்ள தெருக்கள் முழுவதும் நாசமாகியுள்ளன என்று அந்நகர மேயர் இமானுவல் கிரெகோயர் கூறியுள்ளார்.

தலைநகரிலும் பிற நகரங்களிலும் விலைவாசி உயர்வு குறித்து நடைபெற்ற பேரணிகளின் பின்னணியில்தான் வன்முறை வெடித்துள்ளது. உள்விவகார அமைச்சகத்தின் தகவல்படி, இந்தப் பேரணிகளில் 5,50,000 பேர் கலந்துகொண்டனர்; இதில் பங்கேற்ற CGT தொழிற்சங்கமோ, 8,00,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளது.

சுற்றித் திரிந்தனர்; அவ்வப்போது காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதுடன், தீ வைத்தும், பூட்டப்பட்டிருந்த கடைகளைத் தாக்கி உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்தும் வந்தனர்.

பாரிஸ், மார்சேய், நைஸ், நான்டெஸ், போர்டோ, லிமோஜஸ், லில்லி, துலூஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய நகரங்களில் பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், ஆடம்பர ஆடை விற்பனையகங்கள், ஆயத்த ஆடை விற்பனையகங்கள், கண் மருத்துவ நிலையங்கள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனையகங்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டன.

உலகப் போர்களில் இருந்து தப்பிய பிரான்சின் Limoges நகர சபை கலவரக்காரர்களால் தீக்கிரை | Limoges Town Hall Destroyed

 

பாரிஸ் நகரில் இளைஞர்கள் குழுக்கள் திட்டமிட்டே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நகரங்களில் உள்ள நகராட்சி மன்றங்கள் குறிவைக்கப்பட்ட நிலையில், இந்த கொள்ளையும் அழிவு மற்றும் நாசவேலைகள் நிறைந்த அன்றைய தினத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.

இதில் உலகப் போர்களில் இருந்து தப்பிய, 140 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானதுமான Limoges நகர சபை முகமூடி அணிந்தக் கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

போர்டோவிலுள்ள காவல் வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது; அதேவேளையில் லியோனில் போராட்டக்காரர்கள் சுற்றுலா அலுவலகம் ஒன்றிற்குத் தீ வைத்துள்ளனர்.

உலகப் போர்களில் இருந்து தப்பிய பிரான்சின் Limoges நகர சபை கலவரக்காரர்களால் தீக்கிரை | Limoges Town Hall Destroyed

 

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள், நிர்வாக அலுவலகங்கள் அல்லது வணிக நிறுவனங்களைத் தாக்கியவர்கள், அல்லது கொள்ளைச் செயல்களில் ஈடுபட்டவர்கள், நகராட்சி அலுவலகங்களுக்குள் புகுந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட, சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சமூக ஊடகப் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேக்ரானுக்குப் பதிலாகப் போட்டியிட விரும்பும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், இந்தச் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

உலகப் போர்களில் இருந்து தப்பிய பிரான்சின் Limoges நகர சபை கலவரக்காரர்களால் தீக்கிரை | Limoges Town Hall Destroyed

 

எரிபொருள் வரி உயர்வுக்கு எதிராக மேக்ரானின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வீதிப் போராட்டங்களை நடத்திய பிரான்ஸின் 'மஞ்சள் சீருடை' (Yellow Vest) இயக்கம், சனிக்கிழமையன்று 'மஞ்சள் மற்றும் இளைஞர்' போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், மிகவும் தீவிரமான வன்முறைச் சம்பவங்களைக் கடுமையாகச் சாடிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, சனிக்கிழமை இரவு நிலவரப்படி 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.