பிரான்சில் மரங்களில் சுற்றப்பட்டுள்ள கருப்பு பைகள்: ஒரு எச்சரிக்கை செய்தி
vidiyel 21 வைகாசி 2026 · 06:13 6 views
Ad Space
Ad Space
பிரான்சில் பல இடங்களில், நகரங்களிலானாலும் சரி, வனப்பகுதிகளிலானாலும் சரி, மரங்களில் கருப்பு நிற பைகள் சுற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஒரு எச்சரிக்கை செய்தி
அப்படி ஒரு மரத்தில் கருப்பு நிற பை சுற்றப்பட்டிருந்தால், அதன் அருகே செல்லவேண்டாம்.
ஆம், அந்தப் பைகள், மரங்களிலுள்ள கம்பளிப்பூச்சிகள் நிலத்துக்கு வராமல் தடுப்பதற்கான பொறிகள் போல அமைக்கப்பட்டுள்ளன.
நம் ஊர்களில் முருங்கை மரம் போன்ற சில மரங்களில் மழைக்காலத்தின் துவக்கத்திலும் வசந்த காலத்தின் முடிவிலும் கம்பளிப்பூச்சிகள் தோன்றுவதை கவனித்திருக்கலாம்.அதேபோல, பிரான்சில் மரங்களில் கம்பளிப்பூச்சிகள் பெருகும்போது, அவை தரையில் இறங்குவதைத் தடுப்பதற்காக இந்த கருப்பு நிற பைகளை மரங்களைச் சுற்றி கட்டிவைத்திருக்கிறார்கள்.
இவை இயற்கை முறையில் கம்பளிப்பூச்சிகளைப் பிடிக்கும் பொறிகள் ஆகும். இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் உள்ள முடிகள் மனிதர்கள் மீது பட்டால், கடும் எரிச்சலையும் ஊறலையும் ஏற்படுத்தும்.
இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த அந்த முடிகள், மண்ணில் விழுந்து கிடக்கும் நிலையிலும், மூன்று ஆண்டுகள் வரை மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் பிரான்ஸ் வனத்துறை அலுவலர்கள்.