ஈரானின் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் உள்ள RAF மில்டன்ஹால் விமானப்படைத் தளத்திலிருந்து அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான குறைந்தது 10 KC-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அவசரமாக வெளியேறியுள்ளதாக ஃப்ளைட்ராடார்24 தரவுகளை மேற்கோள் காட்டி பிபிசி வெரிபைசெய்தி வெளியிட்டுள்ளது.

திங்களன்று வெளியேறிய KC-135 ரக போர் ரீபியூலிங் விமானங்கள் ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டேஹ்லெம் (Spangdahlem) விமானப்படைத் தளம், இத்தாலியிலுள்ள அவியானோ (Aviano) தளம் மற்றும் ஸ்காட்லாந்தின் பிரெஸ்ட்விக் (Prestwick) விமான நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஈரானின் நேரடி அச்சுறுத்தல் காரணமாகவே அமெரிக்க விமானங்கள் வெளியேற்றப்பட்டதாக தி வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல்  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியாவின் 'RAF ஃபேர்ஃபோர்ட்' விமானப்படைத் தளத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய வாகனங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் அவசரமாக அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க வெளிவிகார செயலாளர் மார்கோ ரூபியோ, 

"வெளிநாடுகளில் உள்ள எமது பணியாளர்கள் மற்றும் இராணுவப் சொத்துக்களின் பாதுகாப்பே முதன்மையானது; அச்சுறுத்தல் எல்லை மீறும்போது எச்சரிக்கை நடவடிக்கையாகப் பணியாளர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.