2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
இப்படி நடப்பது முதல்முறையல்ல, 2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப அவசரச் சட்டம் இயற்றுக
Ad Space
Ad Space
Ad Space
Ad Space