வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால பகுதியில் நேற்று புதன்கிழமை (22) மதியம்; பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 35 உரைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1,126.75 கிலோகிராம் எடையுள்ள பீடி இலைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பீடி இலைகளுடன் பெண் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space