புங்குடுதீவில் புதிய மின்விளக்குகள்
Ad Space
Ad Space
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் நண்பர்கள் சனசமூக நிலையம் முன்பாகவும், சந்தையடிக் குளம் முன்பாகவும், புங்குடுதீவு மத்திய கல்லூரி முன்பாகவும், சென்.சேவியர் சனசமூக நிலையம் முன்பாகவும் அதிக வெளிச்சம் தரக் கூடிய ஐந்து புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் நிறுவுனருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் 75 ஆயிரம் ரூபா நிதிப் பங்களிப்பில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனின் ஏற்பாட்டில் குறித்த புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
Ad Space
Ad Space