இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாலி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்னிலையில் மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது!
Ad Space
Ad Space
வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவறுற்றை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
Ad Space
Ad Space