புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு மீள ஆரம்பம்
Ad Space
Ad Space
புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு நடைமுறைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால், கடந்த சில மணித்தியாலங்களாகப் பதிவு செய்ய முடியாமல் தவித்த வாகன உரிமையாளர்கள் இப்போது தடையின்றிப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
புதிய கியூ.ஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் fuelpass.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, "Vehicle Registration" என்ற பகுதியின் ஊடாகத் தமது வாகனங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
ஏற்கனவே பழைய கியூ.ஆர் குறியீடுகளைக் கொண்டிருப்பவர்கள், அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துவார்களாயின், அவர்களின் தரவுகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் நிலவிய சிக்கல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகலுக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ad Space
Ad Space