முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் நகர் பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.
இதனை தடுக்கும் நடவடிக்கையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதியோரங்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் புதுக்குடியிப்பு நகர்பகுதி மக்கள் வீட்டுக்கழிவுகளை குறித்த வீதிக்கருகில் தொடர்ச்சியாக கொட்டி வருகின்றார்கள்.
இதனால் இந்த வீதி ஊடாக பயணிக்கும் போது அதிக துர்நாற்றம் வீசுவதுடன் காட்டு மிருகங்களின் நடமாட்டங்களால் வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வீதியால் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதிகளவான மக்கள் வாழ்ந்து வரும் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவகற்றல் நடவடிக்கை சரியான முறையில் இல்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு பணம் கட்டியவர்களின் குப்பைகளையே பிரதேசசபை அகற்றிவருவதாகவும்,ஏனைய கழிவுகளை எடுப்பதில்லை எனவும் பிரதேச சபை தகவல்களில் தெரியவந்துள்ளது.
மக்கள் செறிந்துவாழும் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் கழிவகற்றல் நடவடிக்கை சரியான முறையில் இல்லாத காரணத்தினாலேயே மக்கள் தங்கள் வீட்டுக்கழிவுகளை இவ்வாறு வீதி ஓரங்களில் கொட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பில் அறிவிப்பினை மீறி கொட்டப்படும் கழிவுகளால் வீதியால் செல்லமுடியாத நிலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space