புதையல் தோண்டிய இருவர் கைது!
Ad Space
Ad Space
குருநாகல் - பொல்பிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில், சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய இருவர் நேற்று வியாழக்கிழமை (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அகழ்வாராய்ச்சி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 64 மற்றும் 65 வயதுடையவர்கள் எனவும் மா-எளிய மற்றும் பொல்பிதிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space