புத்தளத்தில் பீடி இலைகள் கைப்பற்றல்
Ad Space
Ad Space
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2026 ஜூலை 24 ஆம் திகதி புத்தளம், தளுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு கொண்டுசெல்லத் தயாராகவிருந்த பீடி இலைத் தொகுதியுடன் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டது.
வடமேல் கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான 'தம்பபண்ணி' நிறுவனம், நொச்சியாகம பொலிஸாருடன் இணைந்து புத்தளம் தளுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, அந்த லொறியில் 20 உறைகளில் பொதி செய்யப்பட்டு, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கொண்டுசெல்லத் தயாராகவிருந்த 800 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியுடன் லொறியும் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Ad Space
Ad Space