புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட உத்தரவு!
Ad Space
Ad Space
எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான சுங்கவரி அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளை மூடுவது தொடர்பில் சுங்கவரித் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியினை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி சுங்கவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெறும் மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு, திணைக்களத்தின் தற்காலிக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு அந்த அறிவித்தலில் கோரப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space