பூண்டுலோயா – தவலந்தென்னை வீதி, நியம்கம்தொர விகாரைக்கு அருகில் பாரிய மண்சரிவு
vidiyel 3 ஆவணி 2026 · 04:02 10 views
Ad Space
Ad Space
பூண்டுலோயா – தவலந்தென்னை வீதி, நியம்கம்தொர விகாரைக்கு அருகில் இன்று (03) திங்கட்கிழமை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், பூண்டுலோயா செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் முற்றாக தடைப்பட்டு மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி உள்ளதோடு, இவ் வீதியில் அங்காங்கே மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் சீரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.