பெரகல வனப்பகுதியில் பெண் கொலை : சடலம் மீட்பு!
Ad Space
Ad Space
மஹாஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகல வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (24) பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வராபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
இவர் கடந்த 23 ஆம் திகதி மாலை கால்நடைகளைக் கட்டுவதற்காக வனப்பகுதிக்குச் சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது, வனப்பகுதியிலுள்ள ஓடையொன்றுக்கு அருகில் வெட்டப்பட்ட காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைக்கான காரணம் மற்றும் கொலையை செய்த சந்தேகநபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Ad Space
Ad Space