பெரியகல்லாறில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து: சிறுவன் உள்ளிட்ட 4 பேர் காயம்
Ad Space
Ad Space
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மதிலில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு உடனடியாக கல்லாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space