பெருமளவிலான பீடி இலைகள் காவல் துறையால் கைப்பற்றல்!
Ad Space
Ad Space
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (14) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த பீடி இலைகள் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 1,654 கிலோகிராம் 615 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பீடி இலைகளை கடல் வழியாகக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space