பெல்ஜியத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று இரயிலுடன் மோதிய விபத்தில், இரண்டு பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இரயில்வேயின் கேட் மூடப்பட்டிருந்தபோது, பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர் இரயில் பாதையைக் கடந்து பேருந்தை இயக்க முயன்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 7 பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததாகவும், பல மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
பெல்ஜியத்தில் பள்ளிப் பேருந்து இரயிலுடன் மோதி விபத்து
Ad Space
Ad Space
Ad Space
Ad Space