யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள  SLIIT Northern Uni  நிறுவனத்திற்கு  இன்று (23) பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா விஜயத்தினை  மேற்கொண்டார்.

பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின்  (University of Leicester) துணைவேந்தரான  சேர் நிஷான் கனகராஜா   SLIIT Northern Uni இன் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி  இண்டி பத்மநாதனுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

சர்வதேசக் கல்வி மேம்பாடு. கல்விசார் ஒத்துழைப்பு  ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்  முதுமானி பட்டப்படிப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டடது.