லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தரான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா எதிர்வரும் 23.11.2026 அன்று SLIIT Northern Uni நிறுவனத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயமானது சர்வதேசக் கல்வி மேம்பாடு, கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல், முதுமானி பட்டப்படிப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மருத்துவக் கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற எதிர்காலக் கல்வி அபிவிருத்தி முயற்சிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு எதிர்வரும் 23.11.2026 (திங்கட்கிழமை) மதியம் 12.00 மணிக்கு, அரசடி வீதி வீ , கந்தர்மடத்தில் அமைந்துள்ள SLIIT Northern Uni வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, இந்நிகழ்வில் ஊடக சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) துணைவேந்தரான, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ‘சர்’ (Knighthood) பட்டம் வழங்கி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.