பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பண்டாரகம - களுத்துறை வீதியில், கல்துடே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர்நேற்று (10) சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிய பின்னர் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது,  பஸ்க்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவரில் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஆவார். இச்சம்பவம், தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.