ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் தான் இன்று பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள் என இன்று (9) பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள், ஊழல்வாதிகள் இன்று ஒன்றிணைந்து கூடாரமிட்டுள்ளார்கள். இவர்களின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.
ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊழல்வாதிகளையும், அவர்களின் கருத்துக்களையும் ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளாதார படுகொலையாளிகள்” இன்று பொருளாதாரம் பற்றி பேசுகிறார்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space