போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பன் பல கோடி ரூபா பெறுமதியான பணத்துடன் கைது!
Ad Space
Ad Space
சுமார் 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச்சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலமைச்சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்ககு அமைய சந்தேக நபர் குருணாகலில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் போதைப்பொருள் கடத்தல் ஊடாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை குருணாகல் நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space