மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.
‘எல் மென்சோ’ என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா, அந்நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் சிஜேஎன்ஜி என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தார். 59 வயதான அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவரை கைது செய்ய தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இரண்டு நாடுகளும் அறிவித்தன.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கொலை: மெக்சிகோவில் வன்முறை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space