சமூக ஊடகங்களில் போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணினி குற்றச் சட்டம் மற்றும் இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.   

மேலும், சமூக ஊடகங்களில் உலா வரும் இதுபோன்ற போலியான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.