மகாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பகுதியின் பொல்கஸ்தலாவ காப்புக்காட்டில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகாஓயா பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் உணுவதுர புபுல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் காப்புக்காட்டுப் பகுதியில் இருந்த தனது கால்நடைகளைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மகாஓயாவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space