மகாவலி கங்கையில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!
Ad Space
Ad Space
கம்பளை - இல்லவதுர பகுதியில், மகாவலி கங்கையில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (02) மாலை இந்த சம்பவம் பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பளைப் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space