மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் வேலைநிறுத்தம் – வைத்திய சேவைகள் பாதிப்பு
vidiyel 14 தை 2026 · 06:58 3 views
Ad Space
Ad Space
அரச வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரே ஒரு போதனை வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பணிகள் இடம்பெறாமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்
தூர இடங்களிலிருந்து வைத்திய சேவைகளுக்காக மற்றும் கிளினிக்களுக்காகவும் வருகை தந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த வைத்தியசாலையில் அவசர வைத்திய பணிகள் மாத்திரம் இடம் பெறுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி தெரிவித்தார்.
அக்கரைப்பற்றி ஆதார் வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்ற கோரி குறித்த வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.