மட்டக்களப்பில் வர்த்தக நிலையமொன்றில் பதிவான கொள்ளைச் சம்பவம்
Ad Space
Ad Space
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (09.01.2026) அதிகாலை பதிவாகியுள்ளது.வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலின்படி, சுமார் 45 இலட்சம் ரூபா பணமும், 5 பவுன் தங்க நகையும் மற்றும் கடையில் இருந்த பெறுமதியான பொருட்கள், உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசிடிவி கமராக்களை சேதப்படுத்தியுள்ளதுடன், அவற்றின் காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Ad Space
Ad Space