மட்டக்குளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த இளைஞரின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாதவை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்குளியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space