அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தகந்த பிரதேசத்தில் உள்ள நிர்மாணப்பணித் தளமொன்றில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (21) கரித்தகந்த பகுதியில் உள்ள நிர்மாணப்பணித் தளமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த மூவர் மீது மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபராவார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.